கால் நூற்றாண்டு காலமாக… தமிழ் திரையுலகையே கட்டிப்போட்ட தளபதி… இணையத்தை துவம்சம் செய்யும் ரசிகர்கள்…!

கடந்த 1992 ஆம் வருடத்தில் நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் விஜய். அப்போது அவருக்கு வயது 18. அந்த திரைப்படத்தில் அவரின் நிறம், முக தோற்றத்தை பலரும் கலாய்த்தனர். பல அவமானங்களை சந்தித்து தன் விடா முயற்சி மற்றும் தந்தையின் உதவியோடு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார்.

பல ஹிட் படங்களை கொடுத்து இளைய தளபதியாக உயர்ந்தார். தற்போது அவர் திரைப்படங்கள் வெளியாவதை திருவிழாக்கள் போல் கொண்டாடும் கோடான கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும், திரைப்பட விழாக்களில் அவர் மேடையில் பேசுவதை கேட்பதற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

“என் நெஞ்சில் குடியிருக்கும்” என்று அவர் பேச தொடங்கும்போதே அரங்கமே அதிரும் அளவிற்கு கரகோஷங்கள் எழும். இந்நிலையில் தளபதி விஜய், திரையுலகில் அறிமுகமாகி 31 வருடங்கள் கடந்து விட்டது. எனவே ட்விட்டரில் #31yearsofvijayism என்ற ஹேஸ்டேக்கை வைரலாகி வருகிறார்கள்.