53 வயதாகியும் திருமணம் செய்து  கொள்ளாமல் தனித்து வாழும் ரஜினி பட நடிகை… வரன் தேடும் குடும்பத்தினர்….

தளபதி, எனக்குள் ஒருவன், இது நம்ம ஆளு, போடா போடி என பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சோபனா. தற்பொழுது நடிப்புக்கு சின்னதாக லீவு போட்டு விட்டு சென்னையில் ஒரு பரதநாட்டிய பள்ளி ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளத்திலும் மிகப் பிரபலமான நடிகை.

   

சூப்பர் ஸ்டார் ரஜினி, ஜோதிகா நடித்த ‘சந்திரமுகி’ படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தை ஏற்று ‘தேசிய விருது’ பெற்றவர் நடிகை சோபனா. இவர் பழம்பெறும் நடிகை பத்மினியின் சொந்தக்காரர் ஆவார். தற்போது இவருக்கு வயது 53 ஆகிறது. ஆனால் இவர் தற்பொழுது வரை யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இந்நிலையில் இருபது ஆண்டுகளாக ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவர் இறுதியாக  சிம்பு நடிப்பில் வெளியான ‘போடா போடி’ என்ற படத்தில்  நடித்திருந்தார். நடிகை சோபனா  தற்பொழுது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு ஒரு சில காரணங்கள் கூறப்படுகிறது.

அதாவது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆண் நண்பருடன் சோபனா சுற்றித்திரிந்தார் என்றும் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். ஆனால் தற்போது 53 வயதானாலும் சோபனா திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்து வருகிறார்.அதுமட்டுமின்றி சோபானாவின் குடும்பத்தினர் இப்போதும் அவருக்கு மாப்பிள்ளை தேடி வருவதாக சினிமா விமர்சகர் பயில்வான் அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார்.