
சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் ரகுவரன் இவர் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அப்படி பல விதமான கதாபாத்திரங்கள் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற கதாபாத்திரங்களை பற்றி இதில் காண்போம்.
1.யாரடி நீ மோகினி:
இயக்குனர் ஏ ஜவகர் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான படம் ‘யாரடி நீ மோகினி’. இப்படத்தில் நடிகர் தனுசுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
2.சம்சாரம் அது மின்சாரம்:
இயக்குனர் விசு இயக்கத்தில் வெளியான படம் ‘சம்சாரம் அது மின்சாரம்’ இப்படத்தில் நடிகர் விசுவின் மகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
3.பாட்ஷா:
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1995 ஆண்டு வெளியான படம் ‘பாட்ஷா’ திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
4.ஏழாவது மனிதன்:
இயக்குனர் கே. அரிகரன் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஏழாவது மனிதன்’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
5.அஞ்சலி:
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளியான படம் ‘அஞ்சலி’ இப்படத்தில் ரேவதிக்கு ரேவதியின் கணவராக இப்படத்தில் நடித்துள்ளார்.