பிரபல நடிகர் விஜயின் பலரும் பார்த்திடாத புகைப்படங்களின் தொகுப்பு….

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவரது ரசிகர்கள் இவரை ‘தளபதி’ என்ற செல்லப் பெயரால் அழைப்பார்கள்.இவர் சென்னையை சேர்ந்தவர். இவர் இவரின் உண்மையான பெயர் ஜோசப் விஜய்.இவரது தந்தை SA சந்திரசேகர் ஒரு திரைப்பட இயக்குனர், தாய் ஷோபா ஒரு பின்னணி பாடகர் மற்றும் கர்நாடக பாடகியும் கூட.

   

நடிகர் விஜய் கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா உயர்நிலை மேல்நிலைப் பள்ளி மற்றும் விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். அதன் பிறகு சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்தார் .

நடிகர் விஜய் 1984 ஆம் ஆண்டு வெளியான ‘வெற்றி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தில் நடிக்கும் போது இவருடைய வயது 10. அதை தொடர்ந்து இவர் குடும்பம், வசந்த ராகம், சட்டம் ஓரு விளையாட்டு, இது எங்கள் நீதி, நான் சிவப்பு மனிதன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து நடித்துள்ளார்.

இவர்இயக்குனர் எசு. ஏ. சந்திரசேகர்இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் நடிகராக அறிமுகமானார். இதை தொடர்ந்து செந்தூரப் பாண்டியன், ரசிகன், ராஜ பார்வையிலே போன்ற பல படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான’ பூவே உனக்காக’ என்ற படமானது இவரின் திரைப்பட பயணத்திற்கு ஒரு திறப்பு முனையாக அமைந்தது. இப்படமானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

இவர் தமிழில் வாரிசு, மாஸ்டர், பிகில், சர்க்கார், துப்பாக்கி, நண்பன், வேலாயுதம், சுறா, வேட்டைக்காரன், குருவி, அழகிய தமிழ் மகன், போக்கிரி, சிவகாசி, சச்சின் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு வெளியான கில்லி படமானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. இப்படம் வெளியான முதல் வாரத்திலேயே அதிக மக்கள் பார்த்த திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. நடிகர் விஜய் பிகில், தெறி, புலி, கத்தி, ஜில்லா, தலைவா, துப்பாக்கி, பகவதி, தமிழன் போன்ற பல படங்களில் இவர் பாடல்கள் பாடியுள்ளார்.

நடிகர் விஜய் 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஞ்சய் என்ற ஒரு மகனும் திவ்ய சாஷா என்ற மகளும் உள்ளனர்.2009 ஆம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் இவரது மகன் சஞ்சய் நடித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு வெளியான தெறி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இவரது மகள் திவ்யா சாஷா நடித்துள்ளார். நடிகர் விஜய் ‘தளபதி 67’ என்ற திரைப்படம் அக்டோபர் 19 வெளியாகயுள்ளது.

சமீபத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு, ஊக்கத்தொகை, பரிசு வழங்கினார். இன்று நடிகர் விஜய்யின் பிறந்த நாள் தற்போது இவரின் unseen புகைப்படங்களானது இணையத்தில் வைரலாகி வருகிறது.