“2023 யோகா தினம் ஸ்பெஷல்”… தமிழ் நடிகைகளின் யோகாசன புகைப்படங்கள்..!!

உலகம் முழுவதும் நேற்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. 2023 ஆம் ஆண்டு யோகா தினத்தை முன்னிட்டு தமிழ் சினிமா நடிகைகள் பலரும் யோகா செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அது குறித்த தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.

சாக்ஷி அகர்வால்:

   

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் தான் சாக்ஷி அகர்வால். அதேசமயம் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். இவர் யோகா தின ஸ்பெஷலாக யோகா செய்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ராக்ஷி கண்ணா:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்தான் ராக்ஷி கண்ணா. இவர் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் தனது உடலை அழகாக வைத்திருக்க தினமும் யோகா செய்து வருகிறார்.

பிரணிதா சுபாஷ்:

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பிரணிதா. இவர் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் முதலில் தெலுங்கு திரைப்படமான போக்கிரி திரைப்படத்தின் கன்னட பதிப்பில் முதன்முதலாக சினிமாவில் அறிமுகமானார்.

ஹன்சிகா மோத்வானி:

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ஹன்சிகா. இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்தது. தற்போது இவர் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தர்ஷா குப்தா:

மாடலிங் துறையில் பணியாற்றி சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர்தான் தர்ஷா குப்தா. இவர் தற்போது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் கலக்கி கொண்டிருக்கிறார். இவர் தினம் தோறும் கிளாமரான போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ரகுல் ப்ரீத் சிங்:

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் ரகுல் பிரீத் சிங். இவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க தினமும் யோகா செய்து வருகிறார்.

ஐஸ்வர்யா மேனன்:

சின்னத்திரை சீரியல்களில் நடித்து தற்போது படங்களில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் தான் ஐஸ்வர்யா மேனன். இவர் முதன்முதலில் 2012 ஆம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மாளவிகா மோகனன்:

2013 ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து திரை துறையில் அறிமுகமானவர். தற்போது தமிழ் சினிமாவிலும் கலக்கி கொண்டிருக்கிறார்.

சமந்தா:

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் தற்போது விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தினம் தோறும் யோகா செய்து வருகிறார்.

ரம்யா பாண்டியன்:

தமிழ் சினிமாவில் 2015 ஆம் ஆண்டு டம்மி பட்டாசு திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர்தான் ரம்யா பாண்டியன். இவர் பல குறும்படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தினமும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் உடற்பயிற்சி மற்றும் யோகா ஆகியவற்றை தினம் தோறும் செய்து வருகிறார்.

கௌரி ஜி கிஷன்:

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் இவர். விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் இளம் வயது திரிஷா கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

சமீரா ரெட்டி:

தமிழ் சினிமாவில் 2008 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் சமீரா ரெட்டி. அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்த இவர் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். தற்போது இவர் கர்ப்பமாக இருக்கும் வயிற்றுடன் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கீர்த்தி சுரேஷ்:

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் கீர்த்தி சுரேஷ். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான தசரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்ததாக மாமன்னன் திரைப்படம் வெளியாக உள்ளது.