வில்லன் நடிகர் ஹரிஷ் உத்தமன் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?… வெளியான அழகிய குடும்ப புகைப்படங்கள்

தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஹரிஸ் உத்தமன்.

   

இவர் ஆரம்பத்தில் பாரா மவுண்ட் ஏர்வேஸ் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்களில் மூன்று ஆண்டுகளாக பணியாற்றினார்.

அதன் பிறகு சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் மீடியாவிற்குள் நுழைந்தார். பின்னர் சூர்யா பிரபாகரன் இயக்கிய தா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்த திரைப்படம் தான் அவரின் முதல் திரைப்படம். அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நார்வே தமிழ் பட விழாவில் சிறந்த புதுமுக நடிகர் என்ற விருது இவருக்கு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து விஷால் நடிப்பில் வெளியான பாண்டியநாடு திரைப்படத்தில் இவர் வில்லனாக நடித்தார்.

இந்த திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தனி ஒருவன், பாயும் புலி, பைரவா மற்றும் டோரா சூப்பர் ஹிட் திரைப்படங்களில் வில்லன் மற்றும் துணை நடிகராக அசத்தினார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பிறமொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தமிழ் படங்களில் பிரபலமாக இருந்தாலும் அவரின் பூர்வீகம் கேரளா தான். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மேக்கப் ஆர்டிஸ்ட் அம்ரிதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணம் ஆன ஒரு வருடத்திற்குள் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

இந்நிலையில் ஹரி சுத்தமன் மலையாள நடிகை சின்னு குருவிலா என்பவரை காதலித்து வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் ஜனவரி மாதம் அவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

இந்நிலையில் ஹரிஸ் உத்தமானின் குடும்ப புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.