தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை தான் நடிகை நிவேதா பெத்துராஜ்.இவர் ‘ஒரு நாள் கூத்து’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து ‘பொதுவாக என் மனசு தங்கம்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நடித்து வந்தார் நிவேதா. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு வெப் சீரியஸ்சில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வந்தார். இந்நிலையில் நிவேதா பெத்துராஜின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அதில் அவர் போலீஸ் இடம் சிக்கி வாக்குவாதம் செய்கிறார்.ஆனால் இது உண்மையாகவே நடந்த சம்பவமா? இல்லை படத்தின் ப்ரோமோஷனா என சந்தேகத்தை கிளப்பியுள்ளது. ஏனென்றால், இது போன்ற ப்ரோமோஷன் யுத்திகளை தற்போது பலரும் கையாண்டு வருகிறார்கள்.
#News @Nivetha_Tweets pic.twitter.com/hWuwfpvj3N
— devipriya (@sairaaj44) May 30, 2024