பொது மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட பாலையா.. குடிபோதையில் இருந்தாரா?.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் பாலையா. இவர் நடிப்பில் சமீபத்தில் வரும் அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆகி வருகிறது. இந்நிலையில் அஞ்சலி நடித்த ‘கேம்ஸ் ஆப் கோதாவரி’ என்ற திரைப்படத்தின்  ப்ரோமோஷன் விழவில் ஹைதராபாத்தில் நடந்தது.அந்த விழாவிற்கு விருந்தினராக பாலையா கலந்து கொண்டார்.

   

அவர் மேடையில்  நடிகை அஞ்சலியுடன் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென அஞ்சலியை பிடித்து தள்ளிவிட்ட காட்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விழாவில் பாளைய உக்காந்து நாற்காலி அருகே சரக்கு போன்ற ஒரு பொருள் பாட்டிலில் இருந்ததாகவும் அதன் அருகில் தண்ணீர் பாட்டில் இருந்ததாகவும் வீடியோ  வெளியாகி வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் மேடையிலேயே பாலையா சரக்கு அடித்தாரா?.. மது போதையில் தான் அஞ்சலியை தள்ளி விட்டாரா?.. என பல கேள்விகள் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் பாலையா மது போதையில் இல்லை என்றும் அந்த நிகழ்ச்சியின் போது அவர் மது அருந்தவில்லை என்றும் அவரது தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.