நடித்தது ஒரே படம்.. தன் ‘காதலியின் தந்தை’.. போட்ட கண்டிஷன்..காமெடி நடிகர் செந்தில் மகன் ஓபன் டாக்..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர்தான்  நடிகர் செந்தில். இவர் நகைச்சுவை நடிகரான கவுண்டமணியுடன் இணைந்து நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இவர்கள் இல்லாமல் அன்றைய காலத்தில் முன்னணி ஹீரோக்களின் படத்தில் நடிக்கவே யோசிப்பார்கள் அந்த அளவிற்கு திரையில் செய்யும் அலப்பறையை பார்க்கவே அன்றைய ரசிகர்கள் திரையரங்குக்கு சென்ற காலம் எல்லாம் இருக்கிறது. இவர்கள் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

நடிகர் செந்தில் 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு குறைவான படங்களில் மட்டுமே நடித்துள்ளர். இவர் கடைசியாக சந்தானம் நடிப்பில் வெளியானிக் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் செந்திலின். பிரபல தொலைக்காட்சி ஒன்றில்  இவரது மகன் பேட்டி கொடுத்துள்ளார். அதில் தனது தந்தையை குறித்தும் தனது தொழிலை குறித்தும் பேசி உள்ளார்.

நடிகர் செந்திலின் மகன் பெயர் மணிகண்டன் பிரபு இவர் தான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தன்னை பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். தனது குடும்பத்தில் யாரும் படித்தது இல்லை என்றும் தான் மட்டும் தான் படித்து  மருத்துவரானதாகவும் குறிப்பிட்டுள்ளார். தான் ஒரு ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்ததாகவும் அதன் பிறகு முழுமையாக படிப்பில் கவனம் செலுத்தி மருத்துவர் ஆனதாகவும் தெரிவித்திருந்தார்.

இவர் ஜனனி என்ற பெண்ணே காதலித்ததாகவும் அவர்மருத்துவராக இருந்ததாகவும் ஜனனியின் தந்தை ஒரு மருத்துவருக்கு தான் தனது மகளைத் திருமணம் செய்து கொடுப்பேன் என்று கூறியதால் தானும் பல் மருத்துவருக்கு படித்ததாகவும் தெரிவித்திருந்தார்.இவர்கள் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. நடிகர் செந்திலின் மகன் தன்னால் முடிந்த உதவிகளை ஏழை எளியவர்களுக்கு செய்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

தனது தந்தை கம் பேக்  கொடுக்க சொல்லி ரசிகர்கள் வற்புறுத்தி வந்ததாகவும் அவர்களின் விருப்பத்திற்கு இணங்க அவர் நடிக்க வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து நடிகர் சங்கத்தின் 67ஆவது பொதுக்கூட்டம் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. அதில் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டலை கலை நிகழ்ச்சிகள் நடத்த உள்ளதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதை எடுத்து செய்தியாளர்களை சந்தித்த செந்திலிடம் நடிகர்கள் நடிகர்களிடமே நடிகர் சங்க கட்டிடத்திற்கான நிதி வசூலை செய்யலாமே என்று கேள்வி கேட்கப்பட்டது அதற்கு அவர் அந்த கேள்வியை கோடி கோடியா சம்பளம் வாங்கும் நடிகர்களிடம் கேளுங்கள் என்று கூறினார்.