‘விடாமுயற்சி’ படப் பிடிப்பிற்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய தல அஜித்… புகைப்படத்தை பார்த்து ஷாக்கில் ரசிகர்கள்…

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ‘துணிவு’. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது நடிகர் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

   

இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தில் நடிக்க நடிகர் அஜித்துக்கு 105 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் அஜித் ஏ கே மோட்டோ ரைடு எனும் நிறுவனம் ஒன்றை  தொடங்கினார். இந்த செய்தி இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வந்தது. தற்போது உடல் எடை கூடி இருந்த நடிகர் அஜித் தன்னுடைய விடா முயற்சி திரைப்படத்திற்காக உடல் எடையை வெகுவாக குறைத்து வருவதாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்பொழுது அவர் தனது ரசிகர் ஒருவருடன் உடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தில் தனது உடல் எடையை சற்று குறைத்தது போல அஜித் காணப்படுகிறார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்…