அனைவரும் எதிர்பார்த்த தல அஜித்தின் விடாமுயற்சி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ… சூட்டிங் எப்போனு தெரியுமா..?

விடாமுயற்சி

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்கவுள்ள விடாமுயற்சி படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளார். மேலும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Vidaamuyarchi - விடாமுயற்சி அப்டேட்.. இந்த முறையாவது சொல்வது நடக்குமா?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு | Vidaamuyarchi Shooting Will Starts in August 21 at Hyderabad - Tamil Filmibeat

   

மக்கள் பெரிதும் எதிர்பார்த்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதமே தொடங்க இருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போய் கொண்டே இருந்தது. பின்னர் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என கூறப்பட்டது. ஆனால், அப்போதும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை.

லேட்டஸ்ட் அப்டேட்

இந்நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தினை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதில் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் தொடங்கும் எனவும், இப்படத்தில் அஜித்துடன் இணைந்து சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன், அர்ஜுன் தாஸ் போன்ற நட்சத்திரங்கள்  நடிக்கவுள்ளார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Magizh Thirumeni on X: "Loading...???????????? #VidaaMuyarchi #AjithKumar https://t.co/1yTHMNXbFs" / X