நடிகர் அருண் பாண்டியன் மகளின் திருமண புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அருண்பாண்டியன்.  இலங்கையை சேர்ந்தவர். இவர் தந்தை ஒரு ராணுவ வீரர். நடிகர் அருண் பாண்டியன் அவர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் economics இளங்கலை பட்டம் பெற்றவர்.

   

1985 ஆம் ஆண்டு வெளியான ‘சிதம்பர ரகசியம்’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்கவில்லை.

அதன்பிறகு 1994 ஆம் ஆண்டு வெளியான ‘ஊழியன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இவர் தமிழில் அசுரன், ராஜா முத்திரை, தாயகம்,ஆவது பெண்ணாலே அழுவதும் பெண்ணே, துரைமுகம்,  தேவன், விகடன், தூண்டுதல் போன்ற பல படங்களில்  நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம்,  மலையாளம், ஹிந்தி போன்ற மொழி படங்களிலும்  நடித்துள்ளார். இவர் தேவன், விகடன் போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். நடிகர் அருட்பாண்டியன் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ஏ&பி குரூப்  ஒன்றை தொடங்கினார்.

செந்தூரப்பூவே,  தேவன், விகடன், சர்வம்,  பேராண்மை,  முரட்டுக்காளை,  ஜூங்கா போன்ற பல படங்களை இவர் தயாரிப்பில் வெளியானது. அதை தொடர்ந்து வேலைக்காரன், மாயவன், சர்க்கார், விஸ்வாசம் போன்ற படங்களின் Presenter இவர்.

நடிகர் அருண்பாண்டியன் விஜயா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கவிதா பாண்டியன், கிரானா பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.

இதில் கீர்த்தி பாண்டியன் ஒரு நடிகை. இவர் தும்பா, அன்பிற்கினியால் போன்ற படங்களில்  நடித்துள்ளார். தற்போது இவரது மகள் கிரனாவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.