‘மாமன்னன்’ திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜின் அப்பாவை பாத்துருக்கீங்களா?… பலரும் பார்த்திடாத புகைப்படம்…

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இதன்பின் தனுஷை வைத்து கர்ணன் எனும் படத்தை இயக்கினார். இந்த இரண்டு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து அடுத்ததாக மாமன்னன் திரைப்படத்தை நடிகர் உதயநிதியை வைத்து இயக்கி வெற்றியும் கண்டுள்ளார்.

   

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில், வடிவேலு என பல முன்னணி  நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மாமன்னன் திரைப்படத்துக்கு பிறகு மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படத்திற்கு முன் மற்றொரு புதிய படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஹாட்ஸ்டார் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் இப்படத்திற்கு வாழை என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை நேரடியாக திரையரங்கில் வெளியிட தான் ஹாட்ஸ்டார் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இப்படி திரையுலகில்பிஸியான இயக்குனராக வலம் வரும் இயக்குனர் மாரி செல்வராஜின் அம்மா மற்றும் அப்பாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…