
அரவிந்த் சாமி
90ஸ் காலகட்டத்தில் ரொமாண்டிக் ஹீரோவாக இளம்பெண்கள் மனதில் இடம்பிடித்த நடிகர் அரவிந்த் சாமி தற்போது சிறந்த வில்லன் நடிகர் என்று பெயர் எடுத்து சிறப்பாக நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான ரோஜா, பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம், அலைபாயுதே போன்ற படங்கள் புகழ்பெற்ற திரைப்படங்கள் ஆகும். அதிலும் இவர் நடித்த ரோஜா மற்றும் பம்பாய் திரைப்படம் மாநில, தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது.
இவர் 1994 ஆம் ஆண்டு காயத்திரி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஆதிரை, ருத்ரா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
மேலும் சில ஆண்டுகள் திரையுலகில் இருந்து விலகி இருந்த அரவிந்த் சாமி தனி ஒருவன் திரைப்படத்தின் மூலம் கம் பேக் கொடுத்தார்.
இதுவரை வெளிவராத உண்மை
நடிகர், நடிகைகள் பற்றி யாருக்கும் தெரியாத சில விஷயங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும் நிலையில், தற்போது அரவிந்த் சாமியின் அப்பா பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
அரவிந்த் சாமியின் தந்தை V.D. சாமி என்று அனைவரும் இன்று வரை அறிந்துள்ளனர். ஆனால், அவர் அரவிந்த் சாமியின் தந்தை இல்லை என்றும் பிரபல சீரியல் நடிகர் டெல்லி குமார் தான் இவரது உண்மையான தந்தை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதை நடிகர் டெல்லி குமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் அரவிந்த் சாமி தனக்கு பிறந்தவர் எனவும், ஆனால் அவர் பிறந்தவுடன் தத்து கொடுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இவர் ஆனந்தம், மெட்டி ஒலி போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தில் அவ்வப்போது நடைபெறும் சுப நிகழ்ச்சிகளில் மட்டும் அரவிந்த் சாமி வந்து கலந்து கொள்வார். இவ்வாறு அவரது உண்மையான தந்தை நடிகர் டெல்லி குமார் தெரிவித்துள்ளார்.