
நடிகர் கவின்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் கவின், நிகழ்ச்சி தொகுப்பாளராக நுழைந்து, விஜய் டிவி சரவணன் மீனாட்சி 2 என்ற தொலைக்காட்சி தொடரிலும் மற்றும் பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சியிலும் பங்குபெற்றதன் மூலம் பிரபலமான நடிகர் ஆனார். சமீபத்தில் இவர் நாயகனாக நடித்த “லிஃப்ட்” மற்றும் “டாடா” போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படங்கள் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்று தந்தது. இதன் மூலம் இவருக்கென தனி ரசிகர் வட்டம் மட்டுமல்லாமல், தயாரிப்பு மற்றும் விநியோக வட்டாரத்திலும் இவரது மதிப்பு உயர்ந்துள்ளது.
பொண்ணு யாரு தெரியுமா?
அவரது தோழியான மோனிகா என்பவரை, கவின் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். மோனிகா தனியார்ப் பள்ளியில் பணியாற்றி வருகிறார் என்றும் இருவீட்டார் சம்மதத்துடன், அனைவரின் ஆசியுடன் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.