தனது அன்பு மகளின் பிறந்தநாளை கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடிய நடிகர் பால சரவணன்… வைரலாகும் வீடியோ…

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் பாலசரவணன். அதன்பின் 2013ல் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான ‘குட்டி புலி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானார். இத்திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றார்.

   

பின்னர் திருடன் போலீஸ், டார்லிங், பண்ணையாரும் பத்மினியும் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். குறிப்பாக திருடன் போலீஸ் மற்றும் டார்லிங் படத்தில் இவரது நகைச்சுவை மிகப் பெரிய வரவேற்பு பெற்றது.

இதை தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘டான்’ திரைப்படத்தில் நடித்து கலக்கினார். சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் பாலசரவணன்.

சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்க கூடியவர்  நடிகர் பாலசரவணன். இவர் தற்பொழுது தனது மகளின் பிறந்தநாளை கேக் வெட்டி குழந்தைகளுடன் கொண்டாடிய அழகிய வீடியோவை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களும் அவரின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வைரல் வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Balasaravanan (@actor_balasaravanan)