தமிழ் சினிமாவின் பிரபலமான இளம் நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் பரத். இவர் கடந்த 1984 ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தார். இவருக்கு ப்ரீத்தி என்ற ஒரு தங்கை உள்ளார்.
தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் பரத் முதன்முதலில் சினிமாவில் நுழைந்தார்.
அதனைத் தொடர்ந்து செல்லமே, காதல், வெயில் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதிலும் குறிப்பாக இவர் காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகின் உச்சத்திற்கு சென்றார். இவர் சிறுவயதிலிருந்தே டான்ஸில் மிகவும் ஆர்வம் கொண்டவர்.
அதனால் சர்வதேச நடன பள்ளியில் சேர்ந்து டான்ஸ் கற்றுக்கொண்டார். அதன் பிறகு இவர் மலையாளத்தில் நடித்த டி 4 பீப்பிள் திரைப்படம் 2004 ஆம் ஆண்டு பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட் ஆனது.
அதன் பிறகு பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து பிரபலமானார்.
இப்படி பிசியான நடிகராக இருந்த இவர் ஜெஸ்லி ஜோஸ்வா என்ற பெண்ணை காதலித்து கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரின் மனைவி துபாயில் பிறந்தவர். அங்கு படித்து பட்டம் பெற்ற பல் மருத்துவர் ஆவார்.
இதனிடையே திருமணத்திற்கு பிறகு 5 வருடங்களாக குழந்தை வேண்டாம் என்று பாரத் மற்றும் ஜெஸ்லி தம்பதியினர் தள்ளிப் போட்டனர்.
அதன் பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது.
இதனிடையே நடிகர் பரத் இறுதியாக காளிதாஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த நிலையில் அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து பரத் பாலிவுட் மற்றும் இரண்டு மலையாள திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் நடிகர் பரத்தின் அழகிய குடும்ப புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.