ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த சோகம்… தனது அக்கா, அண்ணனை இழந்த பிரபல நடிகர் போஸ் வெங்கட்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…

தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் இயக்குனர் என பன்முகத் திறமைகளோடு வலம் வருபவர் போஸ் வெங்கட். இவர் தனது  17 வயதில் நடிப்பிற்காக சென்னை குடியேறினார். தொடக்க காலத்தில் இவருக்கு கலைத்துறையில் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.சன் டிவியின் மூலமாக சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது.

   

சன் டிவியில் மிகவும் பிரமாண்டமாக ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல் ‘மெட்டி ஒலி’. இந்த தொடரில் நடித்தது மூலமாக இவர் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார். அதைதொடர்ந்து பாரதிராஜாவின் இயக்கத்தில்  ஈரநிலம் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். அதைதொடர்ந்து  திமுக தலைவர் கருணாநிதியின் கதை, வசனத்தில் வெளிவந்த “கண்ணம்மா” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

மேலும், அவருடைய கதை, வசனத்தில் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர்  தமிழில் சிவாஜி ,மருதமலை, தாம் தூம், சரோஜா, சிங்கம், கோ, யாமிருக்க பயமே, 36 வது வயதினிலே, கவண், தீரன் அதிகாரம் ஒன்று, போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகராக இருந்து தற்போது இயக்குனராக மாறியுள்ளார் .2020 ஆம் ஆண்டு ‘கன்னி மாடன்’ என்ற  திரைப்படத்தின் மூலம் இயக்குனரானார்.

இவர் நடிகை சோனியாவை திருமணம் செய்து கொண்டார் .இவருக்கு தேஜஸ்வின் என்ற மகனும் , பவதாரணி எனும் மகளும் உள்ளனர்.  நடிகர் போஸ் வெங்கட் அவர்களுக்கு வளர்மதி குணசேகரன் என்ற சகோதரி ஒருவர் உள்ளார்.  நேற்றுதனது சகோதரி வளர்மதி குணசேகரன் இயற்கை எய்தி விட்டதாக நடிகர் போஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகத்துடன் பதிவு செய்திருந்தார்.

இதை தொடர்ந்து அவரது அண்ணனும் நேற்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதனால் நடிகர் போஸ் வெங்கட்டின் மொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. தற்பொழுது இதனை அறிந்த ரசிகர்களும், திரைபிரபலங்களும்  தங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sonia Bose (@soniabose26)