‘புட்ட பொம்மா’ பாடலுக்கு குழந்தைகளுடன் நடனமாடிய தளபதி விஜய்… கலக்கல் வீடியோவை வெளியிட்ட பீஸ்ட் பட நடிகை…

தெலுங்கு திரை உலகில் கொடி கட்டி பறந்து வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அத்தோடு இத்திரைப்படத்தின் பாடல்களும் செம ஹிட்டானது.

   

இதை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட்  திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்பொழுது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால் இவர் மீது சமீப காலமாக விமர்சனம் ஒன்றும் வைக்கப்பட்டு வருகிறது.

அதாவது இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஏழு திரைப்படங்களும் தோல்வியை மட்டுமே தழுவியுள்ளது. எனவே அவரை திரைவட்டாரத்தில் விமர்சனம் செய்து வருகின்றனர். தற்போது இவர் மகேஷ் பாபுவின் SSMB28 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் பூஜா ஹெக்டே. இவர் தளபதி விஜயுடன் இணைந்து பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் புட்ட பொம்மா பாடலுக்கு குழந்தைகளுடன் இணைந்து தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடனமாடிய அழகான ரீல்ஸ் வீடியோவை தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த வைரல் வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)