பிக் பாஸ் போட்டியாளர் ஜோவிகாவிற்கு…. பதிலடி கொடுத்த நடிகர் தனுஷ்…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான  நடிகர்களில் ஒருவர் தான்  நடிகர் தனுஷ் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தின் மூலமா திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து  காதல் கொண்டேன், திருடா திருடி ,தேவதையை கண்டேன்,  புதுப்பேட்டை, திருவிளையாடல், யாரடி நீ மோகினி, ஆடுகளம், சீடன், 3 ,தொடரி, மாரி,  தங்க மகன், வேலையில்லா பட்டதாரி போன்ற பல படங்களில்  நடித்துள்ளார்.

   

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், பார்ட்டி இந்த மூன்று படங்களும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.தனுஷ் கோலிவுட்டைத் தாண்டி ஹாலிவுட், பாலிவுட் வரை கலக்கி வருகிறார். இயக்குனர்  அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.  தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். சமீபத்தில் பிக் பாஸ் மூலம் அடிப்படை கல்வி குறித்து சர்ச்சை பெறும் பேச்சுப் பொருளாகியுள்ளது.

இந்நிலையில் படிப்பின் முக்கியத்துவத்தை பற்றி நடிகர் தனுஷ் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தில் ஹீரோக்கள் சிலர் படிக்காமல் இருப்பார்கள். ஆனால் நிஜத்தில் படித்தால்தான் ஹீரோ எனவே படியுங்கள் என தெரிவித்திருந்தார். முன்னதாகவே தனது ரசிகர்களுக்கு பல பேட்டியில் ஒரு டிகிரி ஆவது படிச்சிடுங்க என அட்வைஸ் செய்துள்ளார். தற்போது இவர் படங்கள் கூட படிப்பின்  அவசியத்தை வலியுறுத்தி வருவது.