‘ஈரமான ரோஜாவே  2’ நடிகர் திரவியத்தின் அழகிய குடும்ப புகைப்படங்கள்….

விஜய் டிவி ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பான சீரியல் ‘ஈரமான ரோஜாவே’. இந்த சீரியலானது மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.

   

இந்த சீரியலில் திரவியம், பவித்ரா, காயத்ரி, குமரன்,  பிரவீன், தேவசகாயம் , அர்ச்சனா,  குருமூர்த்தி,  ஜெமினி மணி,  பாண்டி ரவி , பிரேமலதா போன்ற பல பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்துள்ளனர்.

இதில் வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர். நடிகர் திரவியம். இவர் கோவையை  பூர்வீகமாகக் கொண்டவர்.  இவர் கோவையில் உள்ள சி.எஸ்.ஐ பிஷப் அப்பசாமி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.

விஜய் டிவி ஒளிபரப்பான ‘ஈரமான ரோஜாவே’ சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார்.நடிகர் திரவியம்  ரித்து என்பவரை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

விஜய் டிவி ஒளிபரப்பான ‘மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியில் போட்டியாளராக  கலந்து கொண்டார்.இவர் என்கிட்டே மோதாதே 2, ஸ்பீட் கெட் செட் கோ போன்ற  நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

தற்போது இவர் ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’வில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  தமிழ் மட்டுமல்லாமல்  ‘வண்டலக்கா’ என்ற  தெலுங்கு சீரியலிலும் நடித்துள்ளார். இந்த சீரியல் ஸ்டார் மா என்ற சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.

இவர்  சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். தற்போது இவரின் சில குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.