பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனின் மகன் திருமணம்… வெளியான அழகிய புகைப்படங்கள்..

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனின் மகனான சந்தான கிருஷ்ணன் திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

   

இந்திய திரை உலகின் முன்னணி ஒளிப்பதிவாளராக திகழ்ந்து கொண்டிருப்பவர்தான் ரவி கே சந்திரன் மற்றும் ஹேமலதா தம்பதியின் மகன் சந்தானகிருஷ்ணன்.

இவர் முதன் முதலில் நோட்டா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் களமிறங்கினார். இவர் சிறுவயதிலிருந்தே கேமரா மீது அதிக ஆர்வம் கொண்டிருந்ததால் 12 ஆம் வகுப்பை முடித்த பிறகு ஒளிப்பதிவாளராக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

அதன் பிறகு சிங்கப்பூரில் LaSalle என்ற கலை கல்லூரியில் ஒரு வருட கால திரைப்பட தயாரிப்பு படிப்பை முடித்தார்.

அதன் பிறகு படிப்படியாக வளர தொடங்கிய இவர் தற்போது முன்னணி ஒளிப்பதிவாளராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பிரவத் குமார் மிஸ்ரா – மாதுரி மிஸ்ரா தம்பதியரின் மகன் மனைவி மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களின் திருமணம் சென்னை கிண்டியில் உள்ள பார்க் ஹையாட் நட்சத்திர விடுதியில் நேற்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நண்பர்கள் படைச்சூழ வாழ்த்து மழையில் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடந்தது. இவர்களின் திருமணத்தில் திரை பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்து சென்றனர்.

அதன்படி பிரம்மாண்ட இயக்குனரான மணிரத்தினம் தனது மனைவி சுகாசினியுடன் நேரில் சென்று புதுமண தம்பதிகளை வாழ்த்தினார்.

அதனைப் போலவே ராஜமோகன், ரவிவர்மன், சிவக்குமார், கார்த்தி சிவகுமார், ஜீவா, இயக்குனர் சங்கர், ஒளிப்பதிவாளர் மணிகண்டன் ஆகியோர் திருமணத்திற்கு நேரில் சென்றனர்.

மேலும் ஏ ஆர் முருகதாஸ், மேனகா சுரேஷ், தயாரிப்பாளர் தானும், காளிதாஸ் ஜெயராம், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட திரையுலக முன்னணி பிரபலங்கள் அனைவரும் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் வியக்கும் வகையில் திருமணத்திற்கான ஏற்பாடுகளை ரவி கே சந்திரன் மற்றும் குடும்பத்தினர் பிரம்மாண்டமாக செய்திருந்தனர்.

தற்போது ஒளிப்பதிவாளர் சந்தானகிருஷ்ணனின் அழகிய திருமண புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் புதுமண தம்பதிகளுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.