இந்த புகைப்படத்தில் தளபதியுடன் இருக்கும் பிரபல முன்னணி நடிகர் யார் தெரியுமா?… தெரிஞ்சா சொல்லுங்க பாக்கலாம்…

சமீப காலமாகவே பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது நடிகர் ஜெய் தளபதியுடன் எடுத்துக்கொண்ட இளம் வயது புகைப்படம் வெளியாகி உள்ளது. நடிகர் ஜெய் சுப்பிரமணியபுரம் திரைப்படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.

   

தனது இன்னசெண்ட் கதாபாத்திரங்கள் மூலம் பெண்கள் ரசிகர்களை கட்டிப் போட்டவர். எங்கேயும் எப்போதும், எனக்கு வாய்த்த அடிமைகள், பலூன் உள்ளிட்ட படங்களில் ஒன்றாக நடிகை அஞ்சலியுடன் ஒன்றாக நடித்திருந்தார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும், பிறகு ஏற்பட்ட சில மன கசப்பு காரணமாக பிரிந்துவிட்டதாகவும் தகவல்கள் பரவின.

இதனைத் தொடர்ந்து, நடிகை வாணி போஜன் மற்றும் ஜெய் இருவரும் இணைந்து ஒன்றாக வெப் சீரிஸில் ஒன்றில் இணைந்து நடித்திருந்தார்கள். இதனால், இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது. தற்பொழுது நடிகர் நடிகர் ஜெய்யின் ரசிகர்கள் இவரது திருமண அறிவிப்பை எதிர்ப்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தற்பொழுது பல திரைப்படங்களை கைவசம் வைத்துக் கொண்டு பிசியாக நடித்து வருகிறார் நடிகர் ஜெய். இவர் தளபதியுடன் இணைந்து ‘பகவதி’ திரைப்படத்தில் தளபதிக்கு தம்பியாக குணா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தற்பொழுது இப்புகைப்படம் ஆனது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்…