நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் நெருக்கமாக இருக்கும் இந்த நபர் யார் தெரியுமா?… இவர் தான் அவரின் காதலரா?… 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் இவர் நடிப்பில் தற்பொழுது ‘மாமன்னன்’ திரைப்படம் உருவாகி வருகிறது. திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கடைசி திரைப்படமாக மாமன்னன் திரைப்படம் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

   

இதனால் இத்திரைப்படத்தை  எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இத்திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியுடன் சைரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இது மட்டுமின்றி ரிவால்வர் ரீட்டா, ரகுநாதா போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவி உடன் போலோ சங்கர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படி நடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி அடிக்கடி காதல் கிசுகிசுக்களும் பரவிக் கொண்டுதான் வருகிறது. சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் துபாயில் உள்ள தனது நண்பருடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரை தான் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று கூறி வதந்தியை பரப்பி வந்தனர்.

இதற்கு அவரது தந்தை சரியான பதிலடி கொடுத்து முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் மீண்டும் காதல் சர்ச்சையில் சிக்கி உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். அதாவது இவர் தனது ஆண் நண்பர் ஒருவருடன் கட்டியணைத்தபடி இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் ‘இவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷின் காதலரா?’ என்று இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அவரின் புகைப்படம்….