
பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து மக்களிடையே பிரபலமான நகைச்சுவை நடிகர் ஜெயமணி பேட்டி ஒன்றில் நடிகர்களின் உண்மை முகங்கள் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது, கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்.
நகைச்சுவை நடிகர்கள் பலரும் நிஜ வாழ்க்கையில் கோபக்காரர்களாக தான் இருப்பார்கள். உண்மையாக நியாயமாக இருப்பவர்களுக்கு தான் கோபம் வரும். விஜயகாந்த் அவர்கள் கோபப்படுகிறார் என்று பலரும் கூறுவார்கள். அவரின் கோபத்தில் நியாயம் இருக்கும். விஜயகாந்த் மிகவும் மகிழ்ச்சியான நபர்.
படப்பிடிப்பு தளங்களில் தனக்கு பிடித்தவர்களுடன் ஜாலியாக விளையாடிக் கொண்டிருப்பார். அதை பார்த்து மொத்த படக்குழுவும் சிரிப்பார்கள். அவர் சேட்டைகள் செய்து விளையாடுவதை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அவர் உண்மையான மனிதர். அவரைப் போன்ற நடிகர்கள் கிடையாது.
கேமரா இல்லாமலேயே பல முன்னணி நடிகர்கள் நன்றாக நடிப்பார்கள். தன்னை நெருங்க வரும் ரசிகரை அடித்து விரட்டுமாறு உதவியாளர் இடம் கூறுவார்கள். பக்கத்தில் வந்தவுடன் சிரித்துக்கொண்டு புகைப்படம் எடுப்பார்கள். முதலமைச்சர் ஆக வேண்டும் என்று நினைக்கும் முன்னணி கதாநாயகர்களே இப்படி செய்திருக்கிறார்கள். நானே பார்த்திருக்கிறேன். ஆனால் கேப்டன் விஜயகாந்த் நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாதவர், ரசிகர்களை மதிக்கக் கூடியவர் என்று தெரிவித்திருக்கிறார்.