
கருணாகரன்
தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவரான கருணாகரன் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த கலகலப்பு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து பிட்சா, யாமிருக்கப் பயமே , சூது கவ்வும், ஜிகர்தண்டா, விவேகம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார். இவர் ரஜினிகாந்தின் லிங்கா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
குடும்ப புகைப்படம்
இவர் கடந்த 2013ஆம் ஆண்டு தென்றல் என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில், இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், நடிகர் கருணாகரன் தன்னுடைய மனைவி மற்றும் மகள்களுடன் சேர்ந்து எடுத்த அழகிய குடும்ப புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..