திருமணம் ஆன ஒரே மாசத்தில் டைவர்ஸ் செய்த பிரபல சீரியல் நடிகை சம்யுக்தா… புதிய கார் வாங்கி போட்ட ஆக்ரோஷமான பதிவு வைரல்…!!

நடிகை சம்யுக்தா

யூடியூப் சேனலில் ‘நிறை மாத நிலவே’ என்ற வெப் சீரியலின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா. இதனையடுத்து விஜய் டிவியில் ‘சிப்பிக்குள் முத்து’ என்ற சீரியலில் நடித்தார். அப்போது அதே சீரியலில் நடித்த நடிகர் விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் கொண்டார். ஆனால் திருமணம் ஆன ஒரே மாதத்தில், விவாகரத்து செய்யும் நிலை ஏற்பட்டது.

ஆபாச வீடியோ காட்டினார்..அதே மாதிரி பண்ண சொல்லி அடித்தார்.. விஷ்ணுகாந்த் மீது புகார் கூறிய சம்யுக்தா! | Serial actress Samyuktha Reveals Allegations of physical Torture ...

   

அது மட்டும் இன்றி ஒரே மாதத்தில் முறிந்த திருமணம் பற்றி நடிகர் விஷ்ணுகாந்த் பிரபல ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து ஓப்பனாக பேசியிருந்தார். இதற்கு சம்யுக்தாவும் இன்ஸ்டா லைவ் வீடியோ மூலம் பதிலடி கொடுத்தார். இதன்பிறகு இருவரும் இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோவில் ஒருவரை ஒருவர் தாக்கி பேசினர். இவ்வாறு இவர்களின் பிரச்சனையால் சோசியல் மீடியாவை பரபரக்கச் செய்தனர். இந்நிலையில் தற்போது இவர்களின் பிரச்சினை ஓய்ந்த பின் இருவரும் அவரவர் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

samyutha

 

கல்யாணமான இரண்டே மாதத்தில் மனைவியைப் பிரிந்தேனா?'- சீரியல் நடிகர் விஷ்ணு சொல்வதென்ன? |issues between serial real pair vishnukanth-samyuktha - Vikatan

வீடியோ

இந்நிலையில், நடிகை சம்யுக்தா புது கார் ஒன்றை வாங்கி பூஜை போட்ட வீடியோவை வெளியிட்டு, அதனுடன் ஆக்ரோஷமான பதிவு ஒன்றையும் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில் “கடினமாக உழைக்கும் சுதந்திரமான பெண்ணால் முடியாதது எதுவும் இல்லை என்றும் அதை நான் ஒப்புக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். இது சவாலானது தான்.

ஆனால், உண்மையான இதயம், சுத்தமான எண்ணங்கள் கொண்ட ஒரு பெண்ணால் இந்த சமுதாயத்தில் நீந்தி பிழைப்பது என்பது கடினமானது தான். நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியமல்ல.. ஆனால் நாம் எதை செய்தாலும் குறை கூற 4 பேர் இருந்து கொண்டே இருப்பார்கள். அவர்களின் பேச்சுகளை பற்றி கவலை படாதீர்கள். “நாய்கள் குறைக்கட்டும்; அவர்களுக்கு உங்களை நிருபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களுடைய பாதையில் கவனம் செலுத்துங்கள். மேலும் உங்கள் வெற்றியை அவர்களுக்கு செருப்படியாக கொடுங்கள். உங்கள் வெற்றி பேசட்டும்.. என்ற ஆக்ரோஷமான பதிவு ஒன்றையும் எழுதியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. வீடியோ இதோ,