எனக்கும் அனிருத்துக்கும் திருமணமா..!! வெளியான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை கீர்த்திசுரேஷ்… விளக்கம் இதோ..!!

நடிகர் அனிருத்

தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த 3 என்ற படத்தின் மூலம் இசை வாழ்க்கையை தொடங்கியவர் அனிருத். தற்போது இவர் முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் இசையமைத்து வருகிறார். மேலும்  அந்த படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தும் வருகின்றன.

   

மேலும் அனிருத் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக வேலை பார்த்து வருகிறார். இவருடன் சில நடிகைகள் மற்றும் பாடகிகளுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி வந்த நிலையில், அனிருத்-க்கு விரைவில் திருமணம் என்ற தகவல் வெளியானது.

 31 வயதாகும் இவர் பிரபல தேசிய விருது பெற்ற நடிகையை திருமணம் செய்யவுள்ளார் என்ற வதந்தி பரவியது. ஆனால் அவரின் குடும்பத்தினரும், அவருக்கு பெண் பார்த்து வருவதாகவும், நடிகை கீர்த்தி சுரேஷ் தான் அந்த நடிகை என்ற செய்தி எங்கும் கூறப்பட்டு வந்தது. எனவே இதை பற்றி நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கமளித்து, இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அதில் வட இந்திய ஊடகங்களில் எனக்கு, அனிருத்துடன் திருமணம் தொடர்பாக பரவும் செய்தி உண்மையில்லை என கூறியுள்ளார். மேலும் அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர் என்றும் அந்த  பேட்டியில் நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.