நடிகர் மாதவனின் மனைவி மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா?.. பலரும் பார்த்திடாத UNSEEN குடும்ப புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் மாதவன். இவர் தந்தை ரங்கநாதன் டாட்டா ஸ்டீல் நிர்வனத்தில் managing director உள்ளார்.இவரது தாய் சரோஜா இந்தியாவின் வங்கியில் மேலாளராகவும் இருந்தார். இவர் ஜாம்ஷெட்பூரில் உள்ள DBMS ஆங்கிலப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார்.

   

இவர் எலக்ட்ரானிக்ஸில் BSc பட்டம் பெற்றார். கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் பொழுது ராணுவ பயிற்சியை தீவிரமாக செய்து வந்தார். வயது காரணமாக வாய்ப்பை தவறவிட்டார்.

அதன் பிறகு ‘பனேகி அப்னி பாத்’ என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினர். இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

1997 ஆம் ஆண்டு ‘இண்பெர்னோ’ என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

அதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார். 2000 ஆம் ஆண்டு வெளியான அலைபாயுதே திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இவர் தமிழில் என்னவளே, மின்னல், டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால், மாறா, நிசப்தம், மகளிர் மட்டும், இறுதிச்சுற்று,

மன்மத அம்பு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் மாதவன் சரிதா என்பவரை 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்ற  ஒரு மகனும் உள்ளார். வேதாந்த் பல்வேறு நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார் .இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கிறார்.  தற்போது இவர்களின் பலரும் பார்த்திராத குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது.