ஆரம்பிக்கலாமா… விரைவில் தொடங்க உள்ள பிக் பாஸ் சீசன் 7… யார் யாரெல்லாம் கலந்துக்க போறாங்க தெரியுமா?….

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ் .இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது சாமானியர்களையும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி விடுகிறது. அவர்கள் நடந்து கொள்வதைப் பொறுத்து நல்ல பெயரையும், அவப்பெயரையும் ஏற்படுத்தித் தருகிறது. மக்கள் மத்தியில் கிடைத்த பேராதரவைக் கொண்டு ஆறு சீசன்கள்  நிறைவடைந்து தற்போது ஏழாவது சீசன் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

   

இது குறித்து அறிவிப்பும் வெளியாக ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக அவர் தொகுத்து வழங்குவதற்காகவே இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் ஏராளம். படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் நடிகர் கமலஹாசனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் சம்பளம் மிக அதிகம்.

6 சீசன்களை தொகுத்து வழங்கிய இவர்தான். ஏழாவது சீசனையும் தொகுத்து வழங்க வேண்டும் என விஜய் டிவி நடிகர் கமலஹாசனிடம் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவருடைய சம்பளத்தை 50 கோடியாக உயர்த்தியுள்ளதாம் விஜய் டிவி. அதாவது இவருக்கு தற்பொழுது 130 கோடி சம்பளமாக பேசப்பட்டிருப்பதாகவும்,  வரும் ஆகஸ்ட் மாதம் சீசன் 7 தொடங்க இருப்பதாகவும் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த சீசனில் போட்டியாளர்களாக நடிகை ரேகா நாயர், விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் புகழ்பெற்ற சரத், நடிகை உமா ரியாஸ் பிரபல தொகுப்பாளர்களான பாவனா மற்றும் மாகாபா இருவரில் ஒருவர்  போன்றோர் கலந்து கொள்வார்கள் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. எனவே வரும் ஆகஸ்ட் மாதம் பிக் பாஸ் சீசன் 7 தொடங்க இருப்பதால் இத்தகவலை அறிந்த ரசிகர்கள் தற்பொழுது மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.