விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அப்படி விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘கலக்கப்போவது யாரு’. இந்நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு காமெடி நடிகர்கள் தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்து கலக்கி வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த தீனா தற்பொழுது பல்வேறு படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இந்நிகழ்ச்சியில் தீனாவுடன் இணைந்து காமெடி செய்து கலக்கியவர் தான் சரத்.
இவர்கள் இருவர் இணைந்து செய்த காமெடிகள் யாராலும் மறக்க முடியாது.இவர் பார்ப்பதற்கு திரைப்பட நடிகர் மொட்டை ராஜேந்திரன் போன்றே இருப்பார். இவர் தீனாவுடன் இணைந்து மொட்டை ராஜேந்திரன் போல பேசி அசத்திய காமெடிகள் அதிகம் செய்திருப்பார்.
நடிகர் சரத் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு முன்பாக விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் நடித்துள்ளார்.
அதை தொடர்ந்து ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சில் கோமாளியாக கலக்கினார். இந்நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் நடிகர் சிபிராஜ் நடிப்பில் வெளியான ‘சத்யா’ திரைப்படத்திலும் நடித்திருந்தார். இதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.
நடிகர் சரத் கிருத்திகா என்பவரை காதலித்து 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக உள்ளவர்.இவரின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.