மகாலட்சுமி – ரவீந்தர் திருமணமாகி ஒரு வருஷம் தான் ஆகுது… கணவர் ரவீந்தர் கைதான சம்பவம்… பெரும் அதிர்ச்சி…!!

மகாலட்சுமி – ரவீந்தர்

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி, சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் மகாலட்சுமி. இவர் அணில் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படத்துறைகளில் பணியாற்றிய நடிகை ஆவார்.

இந்த நாட்டோட பிரதான பிரச்சனையே எங்க கல்யாணம் தான்.. திருமண நாளில் ரவீந்தரின் நெகிழ்ச்சிப்பதிவு..!. - தமிழ் News - IndiaGlitz.com

   

பின் கணவர் அணில் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரை விவாகரத்து செய்தார். கடந்த ஆண்டு பட தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண புகைப்படங்கள் ட்விட்டர் மற்றும் பிற சமூக வலைதளங்களில் வைரலாகி சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதை இருவரும் கண்டுகொள்ளாமல் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு கடந்த நிலையில், மகாலட்சுமி தன் கணவருடன் திருமணநாளை கேக் வெட்டி கொண்டாடி இருந்தனர்.

6 மாத திருமண நாள் கொண்டாட்டம்.. க்யூட் பதிவை வெளியிட்ட ரவீந்தர் -மகாலட்சுமி ஜோடி! | Producer Ravindar and Mahalakshmi celebrates their 6th month anniversary - Tamil Filmibeat

பின் ரவீந்தரும் மனைவியை புகழ்ந்து பேசி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். இந்நிலையில், 16 கோடி பணம் மோசடி செய்த வழக்கில் தயாரிப்பாளர் ரவீந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் என்று கூறி முதலீடு செய்தால், நல்ல லாபம் தருவதாக கூறி போலி ஆவணங்களை தயாரித்து, 16 கோடி பணம் மோசடி செய்துள்ளார். இந்த சம்பவம் தற்போது சினிமாத்துறையில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.