எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து திடீர் மரணம்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரன் கேரக்டரில்
வில்லனாக நடித்துள்ளார் நடிகர் மாரிமுத்து. இவர் தமிழ் சினிமாவில் நடிக்க களமிறங்கி 33 வருட விடாமுயற்சிக்கு பின், இப்போது சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்துள்ளார்.

ஹீரோவை விட அதிக சம்பளம்... மாஸ் காட்டும் மாரிமுத்து : எதிர்நீச்சல் நட்சத்திரங்களின் சம்பள விபரம் | Indian Express Tamil

   

எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து யுத்தம் செய், பரியேறும் பெருமாள், மருது, சுல்தான், கூட்டத்தில் ஒருவன், பைரவா, விக்ரம் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். தற்போது எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரொம்பவே பிரபலமாகிய மாரிமுத்து, சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இவர் கடந்த 1994ஆம் ஆண்டு பாக்கியலட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

சீரியலில் தான் அந்த மாதிரி, நிஜத்தில் பயங்கர ஸ்வீட்.. எதிர் நீச்சல் குணாவின் நிஜ குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா?

இவ்வாறு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வந்த  நடிகர் மாரிமுத்து, இன்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். இவருடைய மரணம் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 57 வயதான இவர், திடீரென்று மரணமடைந்திருப்பது, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ethirneechal:எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்கான காரணம் என்ன ?.உண்மையை உடைத்த மாரிமுத்து..!