அட அப்படியா..! தன்னை விட12 வயது குறைவான நடிகருடன் மலைக்கா அரோரா காதல் முறிவா…! சர்ச்சைக்கு கிடைத்த முற்றுப்புள்ளி..!!

மலைக்கா அரோரா

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான நடிகை மலைக்கா அரோரா, கடந்த 1998-ஆம் ஆண்டு அர்பாஸ் கான் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

ஆனால், கடந்த 2017ஆம் ஆண்டு இவ்விருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தீடீரென விவாகரத்து செய்தனர். மேலும் விவாகரத்துக்கு பிறகு, பிரபல நடிகர் அர்ஜுன் கபூரை கடந்த சில ஆண்டுகளாக மலைக்கா, காதலித்து வருகிறார் என்ற தகவல் வெளியானது.

   

12 வயது குறைவான நடிகருடன் மலைக்கா அரோரா காதல் முறிவா! சர்ச்சை முற்றுப்புள்ளி | Malaika Arora Breakup With Arjun Kapoor

மேலும் மலைக்காவை விட 12 வயது குறைந்தவர் அர்ஜுன். இதனால் இவர்களின் காதல் விவகாரம், பலமுறை சர்ச்சைகளையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

காதல் முறிவா

எனவே கடந்த சில நாட்களாக மலைக்கா அரோரா மற்றும் அர்ஜுன் கபூர் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது காதலி மலைக்கா அரோராவுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை அர்ஜுன் கபூர் பதிவு செய்துள்ளார். இவ்வாறு இந்த பிரேக்கப் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..

12 வயது குறைவான நடிகருடன் மலைக்கா அரோரா காதல் முறிவா! சர்ச்சை முற்றுப்புள்ளி | Malaika Arora Breakup With Arjun Kapoor