பிரபல நடிகைக்கு இயக்குனர் முத்தம் கொடுத்த சர்ச்சை.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகையின் பேட்டி…!!

நடிகை பிரியங்கா சோப்ரா, விஜயின் தமிழன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இவரது உறவினர் நடிகை மன்னாரா சோப்ரா. இந்த நடிகை தற்போது Thiragabadara Saami என்ற தெலுங்கு படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் இயக்குனர் AS ரவி குமார் சவுத்ரி. அண்மையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடந்த போது, இப்படத்தின் இயக்குனர், நடிகை மன்னாராவின் கன்னத்தில் மேடையில் வைத்து எதிர்பாராத விதமாக முத்தமிட்டுள்ளார். அதற்கு நடிகை அதிர்ச்சிக்குள்ளாகி, அதை வெளிகாட்டிக்கொள்ளாமல் சிரித்து கொண்டே நின்றுள்ளார்.

Actress Mannara Chopra Stills From SIIMA Awards 2019 Red Carpet

   

Raj Tarun's Thiragabadara Saami Movie Teaser Launch – Gallery Set 1

இயக்குனர் முத்தம் கொடுத்த சர்ச்சை.. நடிகை முதல்முறையாக கொடுத்த விளக்கம் | Mannara Chopra Reacts To Director Kiss Controversy

சர்ச்சைக்கு நடிகையின் பதில்

மேலும் இந்த முத்த வீடியோ சோசியல் மீடியாக்களில் அதிகம் வைரலாகி, பெரிய சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் நடிகை மன்னாரா சோப்ரா ஏர்போர்ட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது, இது குறித்து பேசியுள்ளார்.

Actress Mannara Chopra Latest Stills.

அதில் “அவர் முத்தம் கொடுத்தது நானும் எதிர்பார்க்காதது தான். ஆனால் அவர் ஒருவிதமான excitement-ல் அப்படி செய்துவிட்டார் எனவும் என்ன செய்கிறோம் என தெரியாமல் excitement-ல் சிலர் செய்துவிடுவார்கள், அது போல தான் இப்படி செய்தார் எனவும் கூறினார். மேலும் அவர் எந்தவித தவறான எண்ணத்தில் அப்படி செய்யவில்லை”. இவ்வாறு நடிகை மன்னாரா சோப்ரா கூறியுள்ளார். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.