
தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடித்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இந்த ஜோடி 15 வருடங்கள் கழித்து மீண்டும் லியோ திரைப்படத்தில் இணைந்தது. இத்திரைப்படத்திலும் அவர்கள் இருவரும் இணைந்து நடித்த ரொமான்ஸ் காட்சிகள் பெரிய அளவில் பேசப்பட்டது.
இதைததொடர்ந்து, நடிகை த்ரிஷா, நடிகர் அஜித்குமார் உடன் விடாமுயற்சி திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி ஒன்றில் கூறியதாவது, லியோ திரைப்படத்தின் போதே இந்த விஷயத்தை கூறியிருப்பேன். ஆனால் கலவரம் செய்வதற்கு சில பேர் உள்ளார்கள்.
#Trisha-வை கண்ணுல கூட காட்டுலப்பா.. ???? ஆதங்கத்தை கொட்டிய #MansoorAliKhan #shorts pic.twitter.com/9DfsajlLrU
— D2 Cinemas (@D2Cinemas) November 15, 2023
அதனால் சும்மா இருந்தேன். திரிஷாவுடன் நடிக்கிறோம், பெட்ரூம் சீன் இருக்கும். குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கி போட்டது போன்று திரிஷாவை போடலாம் என்று நினைத்தேன் என தெரிவித்திருக்கிறார். தற்போது இவரின் இந்த பேட்டி சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.