
நடிகர் மாரிமுத்து
தமிழ் சினிமா தொடர்ந்து பல கலைஞர்களை இழந்து வரும் சூழலில், அந்த வகையில் யாராலும் ஈடுகட்ட முடியாத இழப்பு தான் நடிகர் மாரிமுத்து. எதிர்நீச்சல் சீரியல் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்த நிலையில், மாரடைப்பு காரணமாக இவர் மரணமடைந்தது யாருமே எதிர்பார்க்காத ஒன்று. மேலும் நேற்று மாலை மாரிமுத்துவின் உடல் அவருடைய சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு, இன்று காலை 10 மணிக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
வாலி படத்தில் மாரிமுத்து
நடிகர் மாரிமுத்து பல இயக்குனர்களிடம் துணை இயக்குனராக பணிபுரிந்த நிலையில், அப்படி அவர் துணை இயக்குனராக பணிபுரிந்தவர்களில் ஒருவர் எஸ்.ஜே. சூர்யா.
மேலும் இவர்கள் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், எஸ்.ஜே. சூர்யா இயக்கிய வாலி படத்தில் விவேக் உடன் இணைந்து மாரிமுத்து நடித்துள்ளார். இந்த வீடியோ சோசியல் மீடியாக்களில் வெளியான நிலையில், ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். வீடியோ இதோ,
மாரிமுத்து Sir in #Vaalee மூவி..!
Vivek…????????
Mayilsamy…????????????
Now #Marimuthu..????????????????#RIPMarimuthu #Marimuthu #Ethirneechal #VidaaMuyarchi @iam_SJSuryah pic.twitter.com/yZ55QM9tCh
— தல_fan_Arya (@BalaMur70599319) September 8, 2023