
நடிகர் மோகன் ஒரு காலகட்டத்தில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே வைத்திருந்தார். அவரின் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முன்னணி கதாநாயகர்களுக்கு இணையாக வளர்ந்து வந்த அவர், அதன் பிறகு வேறு எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.
இந்நிலையில் சென்னையில் இருக்கும் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று நேற்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அதனைத்தொடர்ந்து, அவரின் ரசிகர் மன்றம் சார்பாக ஆயிரம் மக்களுக்கு அன்னதானம் வழங்கியுள்ளார். தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, நடிகர்கள் மற்றும் மக்களுக்கு கேப்டனாக வாழ்ந்தவர்.
அவரின் நண்பராக இருந்தது எனக்கு பெருமை. அவரின் முரட்டு தைரியம், நேர்மை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரின் நிலைவிடத்தில் தற்போதும் அன்னதானம் வழங்கி வருகிறார்கள் என்பது நெகிழ்வான செயல். என் ரசிகர் மன்றத்தின் சார்பில் ஆயிரம் மக்களுக்கு அன்னதானம் வழங்கினோம் என்பதில் பெருமை கொள்கிறேன்.
ஒவ்வொரு நாளும் இந்த அன்னதானம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்த போது, அவர் மீது மேலும் மரியாதை அதிகரிக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.