தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். சீவலப்பேரி பாண்டி எனும் படத்தின் மூலம் மக்களின் மனதை ஆண்டவர் என்று கூட சொல்லலாம். நீண்ட காலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கிவர் சமீபகாலமாக மீண்டும் சினிமாவின் மீது ஆர்வம் கொண்டு நடித்து வருகிறார். முத்துராமலிங்கம், சீமராஜா போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிப்பு மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டார் நெப்போலியன். ஆனால் தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். தற்பொழுது இவர் ஹாலிவுட் திரைப்படங்களில் தனது கவனத்தை முழுவதுமாக செலுத்தி வருகிறார்.
டெவில்ஸ் நைட்(devil’s night ) என்ற திரைப்படத்தில் இவரது நடிப்பு மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் நெப்போலியன். தற்பொழுது இவர் அமெரிக்காவில் கால் பதித்து குடும்பத்துடன் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு தனுஷ், குனால் என்ற இரண்டு மகன்கள் உள்ளார்கள். அதில் மூத்தவரான தனுஷ் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் நெப்போலியன். தற்பொழுது நடிகர் நெப்போலியன் அமெரிக்காவின் 247 வது சுதந்திர தினத்தை தனது குடும்பத்தோடு கொண்டாடும் அழகிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ….
View this post on Instagram