நடிகர் பொன்னம்பலம்
தமிழ் திரைப்படங்களில் நடிகராகவும், ஸ்டண்ட்மேனாக திரை வாழ்க்கையை தொடங்கிய பொன்னம்பலம், ஆரம்பத்தில் ஜிம்னாஸ்டிக் மற்றும் வேறு விளையாட்டுக்களில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். தொடக்கத்தில் அதிகமாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த இவர், பின் இடியுடன் கூடிய மழை என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இவர் நாட்டாமை, தவசி, திருநெல்வேலி, கண்ணுபட போகுதய்யா, அமர்க்களம், சிம்மராசி, அருணாச்சலம், தை பொறந்தாச்சு, வேங்கை போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பின்னர் 2011ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்து அரசியல் வாழக்கையை ஆரம்பித்த நிலையில், பிறகு அதில் இருந்தும் விலகினார். இதனையடுத்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2இல் போட்டியாளராகவும் பங்கேற்றார்.
பொன்னம்பலத்தின் மகள்
இவர் தேவி என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், இவர்களுக்கு கார்த்திக் என்ற மகனும், கிருக்கிகா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சினிமாவில் பயங்கர வில்லனாக மிரட்டிய பொன்னம்பலத்தின் மகளுடைய புகைப்படம் சோசியல் மீடியாவில் அதிகம் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த நெட்டிசன்கள் இவரின் மகளா இது, எவ்வளவு அழகாக இருக்கிறார் என ஆச்சரியப்பட்டு, கமெண்ட் செய்து வருகிறார்கள்.