இது எப்போ நடந்துச்சு…? மோதிரம் மாற்றிக்கொண்ட பிரபாஸ்-அனுஷ்கா… வெளியான திருமண புகைப்படங்கள்…!

நடிகை அனுஷ்காவிற்கு நடிகர் பிரபாஸிற்கும் திருமணம் நடந்தது போன்ற AI புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த அனுஷ்கா பாகுபலி திரைப்படத்தில் நடிகர் பிரபாஸுடன் இணைந்து நடித்தார். அதன்பிறகு, இருவரும் காதலித்து வருவதாக தகவல் பரவியது. இருவரும் இணைந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டது.

   

இவர்களுக்கு எப்போது திருமணம்? என்று ரசிகர்களும் ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், நாங்கள் நண்பர்கள் தான், இருவருக்கும் இடையில் காதல் இல்லை என்று அனுஷ்கா கூறிவிட்டார்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டது போல AI புகைப்படங்கள் வெளியாகி இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர்கள் உண்மையில் திருமணம் செய்துகொள்ளவில்லை. எனினும், பார்ப்பதற்கு நிஜத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டது போல புகைப்படங்கள் தத்ரூபமாக இருக்கின்றன.

இருவரும் மோதிரம் மாற்றிக்கொள்வது, இருவருக்கும் அழகான ஒரு குழந்தை என்று அனைத்து புகைப்படங்களும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. ரசிகர்களை வெகுவாக ஈர்த்த இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.