
நடிகர் ரகுவரன்
தமிழ் சினிமாவில் தனித்துவமான குரல் மூலம் ஸ்டைலிஷ் வில்லனாக தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகர் ரகுவரன், உடல்நிலை சரியில்லாததால் சிறிது காலம் நடிப்பதை நிறுத்தியிருந்தார். தொடக்கத்தில் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய ரகுவரன், நடிகர் ரஜினியோடு பாட்ஷா, மனிதன், சிவா உட்பட பல திரைப்படங்களில் வில்லனாகவே நடித்தார்.
மேலும் தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து, மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். பின் இவர் நடிகர் தனுஷ் கேட்டுக் கொண்டதற்காக யாரடி நீ மோகினி என்ற படத்தில் கடைசியாக நடித்துள்ளார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு அன்று இறந்தார்.
சகோதரரின் பேட்டி
நடிகர் ரகுவரன் இறக்கும் கடைசி நேரத்தில் என்ன நடந்தது போன்ற விஷயங்கள் குறித்து அவரது சகோதரர் ஒரு பேட்டியில் கூறியதாவது, அண்ணன் எதற்காக குடித்தார் என எங்களுக்கு தெரியாது. ஆனால் இவரின் இறப்பு அதிகப்படியான மது அருந்தியதால், உடல் உறுப்புகள் செயலிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் மரணம் ஏற்பட்டதாகவும் சகோதரர் கூறியுள்ளார்.
யாரடி நீ மோகினி படத்திற்கு பின் உடல்நிலை மிகவும் மோசமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதைக்கேள்விப்பட்டதுமே நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பை எல்லாம் நிறுத்திவிட்டு, உடனே மருத்துவமனை வந்து, அவரின் கடைசி நாள் அன்று மருத்துவமனையிலேயே ரொம்ப நேரம் இருந்தார். அவர்கள் இருவருக்கும் நல்ல பழக்கம் என்பதால், அண்ணனின் இறப்பு ரஜினி அவர்களை பெரிதும் பாதித்தது. இவ்வாறு நடிகர் ரகுவரன் சகோதரர் கூறியுள்ளார்.