அதிதி ஷங்கர்
தமிழ் சினிமாவின் பிரபல திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஷங்கரின் 2-வது மகள் அதிதி. இவர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் சென்சேஷன் நடிகையாக வலம் வருபவர்.
அதிதி ஷங்கர் நடிகர் கார்த்தியின் விருமன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து மக்கள் மனதை கவர்ந்து, இவருக்கெனெ பல ரசிகர்கள் சேர்ந்துள்ளனர். மேலும் வெற்றிப்படங்களை கொடுத்து தனது தந்தையிடம் தான் ஒரு நல்ல நடிகை என அதிதி ஷங்கர் நிரூபித்துள்ளார்.
மாப்பிள்ளை யார் தெரியுமா?
சமீபத்தில் அதிதி ஷங்கர் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், இது குறித்து முதல் முறையாக அதிதி பேசியுள்ளார். அதில்”நான் உற்சாகமாக இருக்கிறேன். எனக்கு மாப்பிள்ளை யார் என்று தெரிய வேண்டும்”. இவ்வாறு திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார், அதிதி ஷங்கர்.