அட ரஜினி இப்படி செய்தாரா… குடித்துவிட்டு ரகளை செய்த ரஜினிகாந்த் வெளியான சுவாரசியமான தகவல் இதோ…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் 1990 களில் முன்னணி நடிகராக வலம் வந்தார். நடிகராக வேண்டும் என்ற எண்ணத்துடன்சென்னை வந்த இரஜினிகாந்து, தன் நண்பர் ராச பகதூரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார் .

   

அதை தொடர்ந்து 1976 ஆம் ஆண்டு வெளியான ‘மூன்று முடிச்சு’ என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அதிகமானார். அவை தொடர்ந்து இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவரை இவரது ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று செல்ல பெயரால் அழைப்பார்கள். இவர் நடிப்பிற்காக பல்வேறு விருதுகளை  பெற்றுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்  நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்த நிலையில் ரஜினிகாந்த் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் 1979 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் பட ஷுட்டிங்கிற்காக ஹைதராபாத் சென்றுள்ளார்.

ஷுட்டிங் முடித்தவுடன் விமான நிலையத்திற்கு குடிபோதையில் சென்று இருக்கிறார். அப்போது அவர் நண்பரிடம் தகாத வார்த்தையால் பேசியதால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. விமான நிலைய அதிகாரிகள் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால் ரஜினியை கட்டுப்படுத்த முடியாததால் கண்ணாடி அறையில் இருக்க வைத்துள்ளனர்.

அதையும் உடைத்து அட்டகாசம் செய்தாராம் கடைசியாக ஹைதராபாத் போலீசார் அவரை கைது செய்தனர். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் பற்றி செய்தி தாள்களில் வெளியான பேப் கட் சோசியல் மீடியா பக்கத்தில் பரவி வருகிறது. இந்த செய்தியானது இணையத்தில் வெளியாகி  வைரலாகி வருகிறது.