நடிகர் ரோபோ சங்கர் இவ்வளவு ஒல்லியானதற்கு காரணம் குடிப்பழக்கமா? நோயா?… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து அவரது மனைவி வெளியிட்ட தகவல் இதோ…

தனது கடின உழைப்பின் மூலம் தற்பொழுது சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரோபோ சங்கர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் காமெடியனாக அறிமுகமானார். இதை தொடர்ந்து தொகுப்பாளராகவும், நடன கலைஞராகவும் பணியாற்றி வந்தார்.  

   

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு காலடி எடுத்து வைத்து தற்போது கலக்கி வருகிறார் நடிகர் ரோபோ ஷங்கர். ‘தீபாவளி’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் விஜய், அஜித், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்பொழுது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ரோபோ ஷங்கர்.

கொஞ்சம் குண்டாக இருந்த ரோபோ சங்கர் தற்பொழுது ஒல்லியாக ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். சமீபத்தில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலானது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குடிப்பழக்கமா? அல்லது சர்க்கரை நோயா? எதனால் ரோபோ சங்கர் இப்படி ஒல்லியாகி விட்டார் என்று வதந்திகளை பரப்பி வந்தனர்.

இந்நிலையில் முதன்முறையாக அவரது மனைவி தற்பொழுது இந்த வசந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘அவருக்கு எந்த நோயும் இல்லை. அவர் தற்போது நடிக்கும் ஒரு படத்திற்காக தான் இவ்வளவு உடல் எடையை குறைத்துள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by INDRAJA SANKAR (@indraja_sankar17)