80’ஸ் முன்னணி நடிகை ரூபிணியா இது?… ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாங்களே… வைரலாகும் போட்டோஸ்..!!

80’ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரூபிணி. இவர் குழந்தை நட்சத்திரமாக இந்தியில் ‘மிலி’ என்ற படத்தில் அறிமுகமானார் . இவரை பூர்ணிமா பாக்யராஜ் பார்த்துவிட்டு தமிழில் நடிக்கக் அழைத்து வந்தார்.

   

ரூபிணியின் அம்மா பூர்ணிமாவின் ஃபேமிலி டாக்டர். அவர்தான்தான் ரூபிணியை பாக்யராஜ் எடுத்த ‘சார் ஐ லவ் யூ’ படத்தில் நடிக்க வைத்தார்.

நடிகை ரூபிணியா இது.. ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாங்களே! – News18 தமிழ்

இதைத் தொடர்ந்து ‘தீர்த்தக் கரையினிலே’, விஜய்காந்த்தின் ‘கூலிக்காரன்’, ரஜினியின் ‘மனிதன்’ என ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களில் பிஸியான நடிகையாக வலம் வந்தார் நடிகை ரூபிணி.

இவர் ரஜினி, கமல், மம்மூட்டி, மோகன்லால், சத்யராஜ், விஜயகாந்த், மோகன், ராமராஜன் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தியவர்.

பல ஹிட் திரைப்படங்களில் நடித்த இவர், தனது உறவினரான மோகன் குமார் ரயானா என்பவரை 2000ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அனிஷா ரயான் என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை நிறுத்தி விட்டார் ரூபிணி.

தற்பொழுது இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.