பறிபோன மார்க்கெட்.. ஜெயம்ரவியை வைத்து ஈடுகட்ட நினைக்கும் அனுபமா… என்ன ஆகப்போதோ…?

மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனங்களில் இடம் பிடித்தவர். அதன் பிறகு தமிழில் தனுசுடன் கொடி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்த அவர் அதன் பிறகு காணாமல் போனார்.

   

வசீகரிக்க கூடிய அழகும், இளமையும் இருந்தும் அவரால் தமிழ் திரையுலகில் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை. இந்நிலையில், ஜெயம் ரவி நடித்து வரும் சைரன் என்ற திரைப்படத்தில் அவரின் ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருவதாக வலைப்பேச்சு பிஸ்மி கூறியிருக்கிறார்.

மேலும், சைரன் திரைப்படத்தில் ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் நடிக்கும் நிலையில் அனுபமா பரமேஸ்வரன் பிளாஷ் பேக் காட்சிகளில் நடிப்பதாக அவர் கூறியிருக்கிறார். அத்திரைப்படத்தின் மூலம் இழந்து போன தன் மார்க்கெட்டை மீண்டும் தக்க வைக்க முடியும் என்று அவர் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.