25 கோடி கடன் வாங்கினேனா.. எனக்கு என்னை பாத்துக்க தெரியும்: சமந்தா கொடுத்த பதிலடி..!!

நடிகை சமந்தா

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும், காதலித்து வந்தனர். பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாட்டால் திருமண பந்தத்தில் இருந்து பிரிந்துவிட்டதாக கூட்டாக அறிவித்தனர். அவர் விவாகரத்து பெற்ற பிறகு சினிமாவில் முழுவீச்சில் நடித்து வந்த நிலையில், பின் மயோசிட்டிஸ் என்ற நோயால் கடந்த வருடம் பாதிக்கப்பட்டார்.

   

தற்போது சமந்தா நடித்து வந்த படங்களை எல்லாம் முடித்துக் கொடுத்துவிட்டு சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டிருக்கிறார். அதற்காக அவர் அடுத்து நடிக்க வாங்கி இருந்த அட்வான்ஸ் பணத்தையும் திருப்பி கொடுத்துவிட்டார் என கூறப்படுகிறது. முதலில் ஆன்மீக பயணம், பின் தோழிகளுடன் வெளிநாட்டு பயணம் என நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்த பிரேக் எடுத்ததால் சமந்தாவுக்கு 12 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரின் மருத்துவ செலவிற்கு கடன் வாங்கியுள்ளதாக நேற்று செய்தி பரவியது.

விளக்கம்

இந்நிலையில் தற்போது இந்த செய்தியை பார்த்த சமந்தா, கோபத்துடன்  இன்ஸ்டாகிராமில் பேசி இருக்கிறார்.

“மயோசிட்டிஸ் நோய் சிகிச்சைக்கு 25 கோடியா. உங்களை யாரோ ஏமாற்றி இருக்கிறார்கள். நான் அதில் ஒரு சின்ன தொகையை தான் செலவு செய்கிறேன்.”

‘நான் இத்தனை காலம் என்ன சம்பாதித்தேன் என நினைக்கிறீர்கள். என்னை எனக்கு பார்த்து கொள்ள எனக்கு தெரியும்.’

‘இந்த நோய் பல ஆயிரம் பேருக்கு வருகிறது. சிகிச்சை பற்றி தவறான செய்தி பரப்பாதீங்க.” இவ்வாறு சமந்தா கூறியிருக்கிறார்.

Gallery