அட உண்மையா இது…? விவாகரத்துக்குப் பின் ரகசிய உறவில் நடிகை சமந்தா… வைரலாகும் புகைப்படத்தால் கிளம்பும் சர்ச்சை…!!

நடிகை சமந்தா

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தா, தற்போது டோலிவுட், பாலிவுட் என கலக்கி வருகிறார். இவர் விவாகரத்து பெற்ற பிறகு சினிமாவில் முழுவீச்சில் நடித்து வந்த நிலையில், பின் மயோசிட்டிஸ் என்ற நோயால் கடந்த வருடம் பாதிக்கப்பட்டார். இதனால் நிறைய படங்கள் நடிக்க முடியாமல் போன நிலையில், தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘குஷி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

   

மேலும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட  நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்தனர். விவாகரத்து பெற்ற பிறகு, சினிமாவில் முழுவீச்சில் நடித்து வந்த இவர், தற்போது சினிமாவில் கொஞ்ச நாட்கள் பிரேக் எடுத்துக் கொண்டு அமெரிக்காவை சுற்றி வருகிறார்.

விவாகரத்துக்குப் பின் ரகசிய உறவில் சமந்தா

ரகசிய உறவில் சமந்தா

இந்நிலையில்,14 ஆண்டுகளாக இவரை காதலிப்பதாக ஆண் நண்பர் ஒருவர் கூறியுள்ளார் என்றும் அவருடன் சைக்கிளில் ஊர் சுற்றி வரும் காட்சிகள் புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் சோசியல் மீடியாக்களில் அதிகம் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த நெட்டிசன்கள், நடிகை சமந்தா தன் கணவரை டைவர்ஸ் செய்த பின், ஆண் தோழருடன் ரகசிய உறவில் இருப்பதாக கூறி வருகின்றனர்.

விவாகரத்துக்குப் பின் ரகசிய உறவில் சமந்தா