அட உண்மையாவா…!! நடிகர் சிம்புவுக்கு திருமணம்..? பொண்ணு யாருனு தெரியுமா..?

நடிகர் சிம்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. தற்போது இவர் நடிப்பில் சிம்பு – 48 என்ற படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார் என்றும் இப்படத்தை உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.

   

தற்போது இந்த படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்,இப்படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களை போல், இவருக்கு சாதாரண ரசிகர் கூட்டம் கிடையாது. அந்த வகையில் நடிகர்கள் விஜய், அஜித்திற்கு இருக்கக்கூடிய அளவுக்கு வெறித்தனமான ரசிகர் பட்டாளம் சிம்புவுக்கும் உள்ளது.

மேலும் இவர் சினிமாவில் நடிப்பு, நடனம், இயக்கம், கதை, பாடல்கள் எழுதுவது மற்றும்   பாடுவது, இசையமைப்பது, திரைக்கதை எழுதுவது என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயலாற்ற கூடிய திறமை கொண்டவர்.

சிம்புவுக்கு திருமணம்

அவ்வப்போது இவரின் திருமணம் குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தற்போதும் இவருடைய திருமணம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி ஆந்திராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மற்றும் சினிமா ஃபைனான்சியருமான ஒருவரது மகளுடன், திருமணம் செய்ய போவதாக  தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த தகவல் உண்மையாக இருக்குமா..? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.